தர்மபுரி கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி சமேத பர வாசுதேவ பெருமாள் கோவிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடிப்பூர விழா நடந்தது.

ஆடி மாதம் ஆறாம் நாள் பூர நட்சத்திரத்தில் அவதரித்த கோதை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு ஆடிப்பூர விழா கோட்டை ஸ்ரீ வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவர் பெருமாள் கோயிலில் நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு ஆண்டாள் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. காலை 10 மணி அளவில் ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அஷ்டோத்திர சத நாம குங்கும அர்ச்சனை நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்திற்கு சக்தி அம்மனாக பாவித்து பெண்கள் மஞ்சள் கயிறு படைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
விசேஷ பூஜைகள் நடந்தது. பெண்கள் வளையல் குங்குமம் மஞ்சள் கயிறு படைத்து ஆடிப்பூர வளைகாப்பில் கலந்து கொண்டனர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உதயகுமார் செயல் அலுவலர் ராஜகோபால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்சயா முருகன் சுந்தரம் ஆகியோர் செய்து இருந்தனர்.