கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி..
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இப் பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் இரண்டு மையங்களில் நடைபெற்ற பயிற்சியினை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி குறித்த ஆலோசனைகளை வழங்கி பள்ளி அளவில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வலியுறுத்தினார்.
இப்பயிற்சியில் உடல்நலம் , நல்வாழ்வு மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் சார்ந்து விரிவாக பயிற்சியளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் ஆசிரியர்கள் பழனியாண்டி, தமிழரசி, சின்னராஜா, ஆறுமுகசாமி, ஜோதி வின்னரசி, ரொனால்டு ஸ்டீபன்,சுதாகர், சவரிராஜ், மாலதி, ஜெம்மாராகினி சகாய கில்டா, ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாரதிதாசன், ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் சிறப்பாசிரியர்கள் ரம்யா, ராணி, அறிவழகன், ராதா , பிரியா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் சார்ந்த கருத்துக்களை ஆசிரியர்களுக்கு வழங்கினர்