பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் நான்கு முதல் ஐந்து வரை வகுப்புகள் எடுக்க கூடிய அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது ஜெயங்கொண்டம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்கள் துவக்கி வைத்தார் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், வட்டார கல்வி அலுவலர்கள் அ.மதலைராஜ் க.ராசாத்தி மற்றும் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் க.கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புவரை கையாளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 141 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர் பயிற்சியினை இடைநிலை ஆசிரியர்கள்
ஜோசப் மேரி, மல்லிகா, இந்திரா காந்தி, ஜேசுராஜ், கருணாகரன், மீனா, ஜார்ஜ் மற்றும் அமுதா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு பள்ளியில் மேற்கொள்ள இருக்கின்ற செயல்பாடுகள் குறித்த பயிற்சிகளை வழங்கினார்கள்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் சு.ஐயப்பன், அ.அந்தோணி சேவியர், சூ.சரவணன், க.இளையராஜா, க.செந்தில் ,ஆ.டேவிட் ஆரோக்கிய ராஜ் பயிற்சியினை ஒருங்கிணைத்து பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.