அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் கைப்பந்து குழு சார்பில் 21 ஆம் ஆண்டு ஆண்கள் – பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான மாநில அளவிலான மின் ஒளியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதற்கு முன்னாள் பேரூராட்சி சேர்மன் கஜேந்திரன், தலைமை தாங்கினார்.
நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சந்துரு, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், நாடார் உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மஞ்சமலை ட்ரேடர்ஸ் சுரேந்திரன் வரவேற்றார். பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன் போட்டியை துவங்கி வைத்தார். இந்த போட்டியில் திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என தனித்தனியே முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை, மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை பாலமேடு காமராஜர் கைப்பந்து குழு செய்துள்ளனர்.