கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் கூடுதல் பொறுப்பு ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆகியோர் ஆலோசனைக்கு இணங்க நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகரை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
அதேபோல வால்பாறை நகராட்சியின் 12 வது வார்டுக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து வைப்பது என்பது பற்றி விரிவாக எடுத்துக்கூறி பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதை பயன்படுத்துவதை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் இ.ரா.சே.அன்பரசன் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்