பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை..
அந்தப் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருவதால் பதட்டம்..
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி கீழத்தெருவில் வசித்து வருபவர் முகமது பாருக். இவர் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், அதே கட்சியில் தொழிற்சங்க தேசிய பொதுச் செயலாளருமாகவும் இருந்து வருகிறார். இந்த இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திருபுவனம் பகுதியில் மதமாற்றம் செய்வது தொடர்பாக தட்டி கேட்டதால் பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து முகமது பாருக் வீட்டை சோதனை செய்து வருகின்றனர். இதனால் அதிகாரிகளுக்கும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவருக்கும் இடையே ச வாக்குவாதமமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.