ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திமுக அரசை கண்டித்து கொடராச்சேரி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசின் விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களின் ஆலோசனைப்படி திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் அரசன் அறிவுறுத்தலன் அறிவுறுத்தலின் பேரில் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய இலவங்கர்குடி ஊராட்சிக்குட்பட்ட பவித்திர மாணிக்கம் கடை தெருவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் கே பி ரவி தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராணியற்ற திமுக அரசை கண்டிக்கும் வகையில் மகளிர்க்கு ரூபாய் 1000 வழங்குவதில் பாரபட்சம் கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனை டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெருகிட தடுப்பணைகள் நீர்மட்டம் ஆறுகளின் குறுக்கே அமைக்க வேண்டும் மணல் குவாரி மக்கள் சொத்துக்களை கடத்த வேண்டாம் இயற்கை வளங்களை சுரண்ட வேண்டாம்.
இந்து கோவில்களை இடிக்க வேண்டாம் மக்கள் ஆன்மீக உணர்வை தடுக்க வேண்டாம் மக்கள் நலத்திட்டங்களில் ஊழல் செய்ய வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன
நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் இர லோகநாயகி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் எட்டியலூர் சிவா நகரத் தொழில் பிரிவு தலைவர் மணி துணைத்தலைவர் காளிதாஸ் வார்டு உறுப்பினர் டி வீரமணி முன்னாள் ஒன்றிய தலைவர் காளிதாஸ் விருந்தோம்பல் பிரிவு ஒன்றிய தலைவர் நாகலிங்கம் ஒன்றிய தலைவர் காளி ஐயப்பன் உள்ளிட்ட கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இளவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்