கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கொண்டாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, 1995-ம் ஆண்டு நிலவிய சூழ்நிலையை, மீண்டும் உருவாக்கிய முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கொண்டாடி மகிழ்‌ந்தனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பிஎஸ்ஜி கல்லூரி முதல்வர் டி.பிருந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரி செயலாளர் டி.கண்ணையன் முன்னிலை வகித்தார்.

இவ் விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் 1995-ம் ஆண்டு மிகவும் பிரபலமாக இருந்த டீ கடை, பெட்டிக் கடை, ஐஸ் கிரீம் கடைகள் ஆகியவை ‘செட்’ போட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டன.

இந்தக் கடைகளில் நாட்டு சர்க்கரை டீ, தேன் மீட்டாய், ஐஸ் சேமியா போன்ற அந்தக் காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தின்பண்டங்கள் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, செண்டை மேளம் முழங்க, முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் ஊர்வமாகச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற வகுப்பறைக்குச் சென்று, மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். மேலும், இந்த முன்னாள் மாணவர்களுக்கு தங்களுக்கு கல்வி போதித்த முன்னாள் பேராசிரியர்களை வகுப்பறைக்கு அழைத்துச் சென்று, கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற புள்ளியியல் துறையில் 1995-18 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் சதசிவம் கூறியது:
25 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கல்லூரி தோழர்களையும், தோழிகளையும் சந்திப்பது எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகக் கருதிகிறேன். 1995-ம் ஆண்டு இருந்தது போல, கல்லூரியில் செட் அமைக்கப்பட்டு இருப்பது மீண்டும் எங்களை கல்லூரி நாள்களுக்கே அழைத்துச் செல்கிறது. இத்துடன் எங்களின் பேராசிரியர்களுடன் கலந்துரையாட கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்றார்
புள்ளியியல் துறையில் முன்னாள் மாணவி லட்சுமி கூறுகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களின் பேராசிரியர்களின் உரையை கேட்டு மி்க்க மகிழ்ச்சி அடைந்தோம். இந்தச் சந்திப்பை நாங்கள் கேக் வெட்டி கொண்டாடினோம்.

இது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றார்.
இதைத் தொடர்ந்து, பிஎஸ்ஜி கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் டி.பிருந்தா தலைமையில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் பேராசிரியர்களின் சேவை பாராட்டப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *