மணலி புதுநகர் பகுதியில் பெயிண்ட் குடோன் தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மூச்சு திணறல் சருமம் நோய் ஏற்பட அபாயம் உள்ளது
திருவொற்றியூர்
சென்னை மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் அருகில் அகமது பாய் என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் குடோன் உள்ளது இந்த கம்பெனியில் நேற்று மதியம் திடீரென கரும்புகை வெளியேறி பயங்கர மல மலவென தீப்பற்றி பெயிண்ட் குடோனில் இருந்து பெயிண்ட் டப்பாக்கள் வெடிக்க தொடங்கியது உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்
சம்பவ இடத்திற்கு மணலி அம்பத்தூர் ஆவடி செங்குன்றம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையில் இருந்து சுமார் 8 தீயணைப்பு வாகனங்கள் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீனை கட்டுப்படுத்த போராடி வந்தனர்
மேலும் வியாசர்பாடி செங்குன்றம் மாதவரம் பெரம்பூர் திருவொற்றியூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்கள் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது மேலும் தீயணைப்பு ராட்சத ஏணி மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் குடிநீர் வாரிய டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து பீச்சி அடித்து தீயை 8மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் வடக்கு தீயணைப்புத்துறை மேலாண்மை நிலைய இயக்குனர் தென்னரசு சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்
கரும்புகை சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள் புரிந்ததால் பெயிண்ட் குடோன் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவி பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் தண்ணீரில் ஏற்பட்டுள்ளது
மேலும் இந்த புகை மண்டலம் வீடுகளில் மீது கருப்பு படிவம் ஏற்பட்டு சர்வ எரிச்சல் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர் இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது
இந்த குடோனில் போதிய பாதுகாப்பின்றி மொத்தமாக இருப்பு வைக்கப்பட்டிருந்தது அளவுக்கு அதிகமாக இருப்பு இருந்ததால் தீப்பற்றியவுடன் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் வெகு நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர் இதன் சேத மதிப்பு சுமார் 50 லட்சம் இருக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்
இதனால் இப்பகுதியில் சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாய் இருந்தது அப்பகுதி விபரீதம் இதுவும் நடக்காமல் இருக்கவும் பொது மக்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டுமென கருதி பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்