திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னம் பேடு பகுதியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபடுவது வழக்கம் அப்போது அவர்கள் தங்களது குறைகளை நிவற்த்திக்க வேண்டி ஆறு வாரத்திற்கு நெய்தீபம் ஏற்றினால் நிறைவேறும் என்பது குறிப்பிடத்த க்கதாகும்.
இதையடுத்து நேற்று ஆடி மாத செவ்வாய்கிழமை,பொர்ணமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து முருகனை வழிபட்டனர் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் செயல் அதிகாரி கோ செந்தில் குமார் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.