பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில்..

தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவடையில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பண்டாரவாடையை சுற்றியுள்ள மகளிர் மற்றும் கர்பினி பெண்கள் கலந்து கொண்டனர் பாபநாசம் லயன்ஸ் கிளப் மற்றும் அன்னை சாரதா மகளிர் மன்றம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், தாய்ப்பால் கொடுப்பது பற்றிய விழிப்புணர்வுகள் குறித்தும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுத்து எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 5 நபர்களுக்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்ப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *