கழுகுமலை அருகே களப்பாளங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சம்பகுளம் கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் உள்ள பழமையான உறை கிணற்றை சீரமைத்து அதில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து பழமையான கிணறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியினை நேற்று களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் துணை தலைவர் மாரிராஜ், 1 வது வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் மற்றும் மாரியப்பன், காசிப் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.