சத்தியமங்கலம் பவானிசாகர் வனச்சரகத்துக்குட்பட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் யானைகள் அதிகாலையில் காட்டுப்பகுதியில் இருந்து அணையின் மேல் பரப்பிலிருந்து அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிப்பது வாடிக்கையாகிவிட்டது
அதேபோல் பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து பவானிசாகர் அணை பகுதிக்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த ஒற்றைக் காட்டு யானை அணையின் மேல் பகுதியில் அப்படியே நடந்து பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்தது இதைப் பார்த்த பூங்கா ஊழியர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்
பிறகு யானை மெல்ல மெல்ல பூங்காவில் உணவு கிடைக்குமா என அங்கும் இங்கும் அலை மோதி கடைசியாக ஒரு வழியில் பூங்காவில் நுழைவாயில் இருந்து வெளியே வந்தது வெளியே வந்த காட்டு யானை பூங்காவின் எதிரே உள்ள கடைகளுக்குச் சென்று ஏதாவது உணவு கிடைக்குமா என தேடிப் பார்த்தது அதிர்ஷ்டவசமாக கடை மூடி இருந்ததால் யானை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு பிறகு பவானி ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் வழியாக நடந்து
சென்று பவானிசாகர் வனப்பகுதிக்குள் சென்றது தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து போகும் பவானிசாகர் அணை பூங்காவில் காட்டு யானை பட்டப் பகலில் வந்தது அங்கிருந்த பொதுமக்களும் ஊழியர்களும் பரபரப்படைந்தனர்