தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
காக்கணாம்பாளையம் ஊராட்சியில்15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்கனாம்பாளையம் ஊராட்சி கூடப்பட்டு ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 15 வது நிதி குழு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டிடம் அமைக்க பரிந்துரை செய்து, அப்பணி நிறைவடைந்து இன்று பள்ளி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் A நல்லதம்பி MLA அவர்கள் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் வட்டார கல்வி அலுவலர்கள் கமலநாதன் மற்றும் நெடுஞ்செழியன் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம்,பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளா, ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, கலைவாணி செல்வராஜ்,ஒன்றிய அவைத்தலைவர் சின்னத்தம்பி,மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், சிவலிங்கம், பூபதி மேகநாதன்,குப்பன்,செல்வம், ஞானவேல்,முத்து, குபேந்திரன், திருநாவுக்கரசு,கண்ணன்,சாம்ராஜ், அண்ணாமலை,காளிதாஸ், குணசேகரன்,அருள்,சிலம்பரசு, ஜீவா, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்,வார்டு உறுப்பினர்கள, பள்ளி ஆசிரியர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள் கழகத் தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.