பெரியகுளம் எம்எல்ஏ- வுடன் விசிக நிர்வாகிகள் சந்திப்பு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக் மண்டல செயலாளர் இரா.தமிழ்வாணன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.புதிதாக பொறுப்பேற்ற விசிக நிர்வாகிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்வில் திமுக நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ் விசிக முன்னாள் மாவட்ட செயலாளர்நாகரத்தினம் ஒன்றிய செயலாளர் ஆண்டி,நகர செயலாளர் ஜோதி முருகன் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் ஆண்டவர், மற்றும் விசிக திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.