நாமக்கல் தாய்ப்பாலை பாதுக்காகவும் ,ஊக்குவிக்கவும்,மற்றும் ஆதரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது
இந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா நர்சிங் கல்லூரியின் சார்பில் மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது .இவ்விழாவில் ஆரம்ப சுகாதார நிலைய தொகுதி மருத்துவ அதிகாரி தலைமை தாங்கினார்
.அடுத்ததாக கல்லூரி முதல்வர் சுமதி குழந்தையின் வளர்ச்சியில் தாய்ப்பாலின் பங்கு பற்றி உரையாற்றினார்
கல்லூரியின் துணை முதல்வர் கீதா தாய்ப்பால் சுரப்பதற்க்கான உணவு வகைகள் பற்றி எடுத்துரைத்தார்இந்நிகழ்ச்சியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் கல்லூரி மாணவிகள் தாய்ப்பால் விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றினர்.
இங்கு சுமார் 30 கர்ப்பிணி பெண்கள் ,10 செவிலியர்கள் ,50 மாணவிகள் மற்றும் 6 கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் முதலில் தொகுதி மருத்துவ அதிகாரி கருணாகரன் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும்,முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.
கல்லூரியின் சார்பில் நசிரா தாய்ப்பால் புகட்டுவதற்க்கான நிலைகள் பற்றியும் ,தாய்ப்பாலில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
.அடுத்தபடியாக சுஜாதா மற்றும் சத்யபாமா தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கினார்கள்மேலும் மூத்த செவிலியர் தாய்ப்பால் வார விழாவின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்கள்
விவேகானந்தா செவிலிய கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக விழிப்புணர்வு நாடகம் வாயிலாக விளக்கினார்கள்.
சிற்றுண்டி வழங்கப்பட்டது . கல்லூரியின் சார்பாக ஆராய்ச்சிக்கான வினா விடை சேகரிக்கப்பட்டதுஅதன் முடிவு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுவிழாவின் நிறைவாக கல்லூரி பேராசிரியர் நசிரா நன்றியுரையாற்றினார்