ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
கெராடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் மற்றும் பத்தூர் மேல்கரை முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ. நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருவாரூர் மாவட்டம், கெராடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் மற்றும் பத்தூர் மேல்கரை முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் முதியோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்
சமையல்கூடம், குளியலறை, முதியோர்களை பராமரித்துவருவது தொடர்பான பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கொரடாச்சேரி ஒன்றியம், பத்தூர், மேல்கரை பகுதியிலுள்ள குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் சமையலறை, குளியலறை, கழிவறை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், குழந்தைகளிடம் கலந்துரையாடி, குழந்தைகளின் தேவைகளை கேட்டறிந்தார்பின்னர் குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டிற்கான அட்டைகள் மற்றும் எழுதுபொருட்கள் புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்
நிகழ்வில், திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்