வலங்கைமான் தாலுக்காவில் மேலும்விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும் நிலை உள்ளது.

இதனால்முதல்வருக்கு, வலங்கை மான் விவசாயிகள் நன்றி தெரிவிப்பு.தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் ஒரு லட்சம்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது தொடங்கி வைத்தார்.

அந்த ஆண்டில் விவசாயி களுக்கு ஒரு லட்சம் மின்இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயி களுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள்வழங்கும் ஆணையை வழங்கினார்.

அதன்படி மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி 4
மாதத்திற்குள்ளேயே திட்டத்தை முடிக்க மின்சாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் 4.5லட்சம்விவசாயிகள் விண்ண ப்பித்த நிலையில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர
திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 4 மாதத்திலே ஒரு லட்சம் விவசாயி களுக்கு மின் இணைப்புதரும் திட்டத்தை செயல்
படுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி உழவர்களுக்கானஆட்சி என முதல்வர் கூறினார். விவசாய பிரதிநிதிகள் கூறுகை யில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா நெருக்கடி என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் திக்கித்
திணறிக் கொண்டிருந்த சூழலில் ஒரு லட்சம் இலவச விவசாய மின்இணைப்புகள் என்பதுஅவர்களுக்கு நம்பிக்கை யை விதைக்கும் திட்ட மாக உள்ளது.

சாதாரண மற்றும் சுயநிதி பிரிவுக ளுக்கே பெரும்பான்மை
மின் இணைப்புகள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்க்குரியது. தமிழக முதல்வராக பெறுப்பேற்றது முதல் குருவை தொகுப்பு திட்டம் உள்ளிட்ட விவசா யிகளுக்கு நலன் பயக்கும் பல திட்டங் களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்குஇலவச மின்சார திட்டத்தை அறிவித்து ள்ளது உண்மையிலேயேவரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு. வெறும் அறிவிப்போடு நிற்காமல் உடனடியாக அத்திட்ட த்தை செயல்படுதாதவும் தொடங்கிய தமிழக முதல்வருக்கு ஆயிரமா யிரம் நன்றிகளை விவசாயிகள் தெரிவித் தனர். இதையடுத்து 50ஆயிரம் விவசாயி களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் புதிதாக50,000 விவசாயிகளுக்கு
மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து கடந்த 27-ம் தேதி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.


திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட தெற்கு பட்டம், வீராணம்,கீழவிடையல், கோவிந்தகுடி, தொழவூர்,44 ரெகுநாதபுரம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயி களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தங்களை சமாளிக்கும் விதமாக கீழ நல்லம்பூர், கோவிந்தகுடி,விருப்பாட்சிபுரம், சித்தன்வாழர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25கே வி மின் திறன் கொண்ட மின்மாற்றிகள் ஆறு , 63 கே வி மின் திறன் கொண்ட மின்
மாற்றிகள் 22,100கே விமின் திறன் கொண்ட மின் மாற்றி நான்கு,250கே வி மின் திறன் கொண்ட மின் மாற்றிகள்
16 கே வி திறன் கொண்டமின் மாற்றி என 32 மின்
மாற்றிகள் புதிதாக மின்வாரிய பொறியாளர் அகஸ்தியா மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் வலங்கைமான் தாலுகாவில் மட்டும் சுமார் 55விவசாயி களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டும். 32 மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் 2லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளது என திருச்சியில்நடைப்பெற்ற வேளாண்சஙகமம் 2023 நிகழ்வில்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறினார்.

மேலும் 50ஆயிரம் வீதம் வருடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில்
வலங்கைமான் தாலுகாவை சேர்ந்த மேலும் சில விவசாயி களுக்கு மின் இணைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து வலங்கைமான் பகுதி விவசாயிகள் மின் வாரியத்துக்கும், தமிழகஅரசிற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *