கோவையில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள யூஸ்டு கார் விற்பனை மேளாவில் உயர் ரக சொகுசு கார்கள் முதல் நடுத்தர வகை கார்கள் என 600 க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுப்பு
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் கார் பிரியர்களை கவரும் விதமாக,கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஸ்ரீ லட்சுமி நாராயணா மண்டபத்தில்,ஸ்ரீ சாமி கார்ஸ் சார்பாக யூஸ்டு கார் மேளா எனும் பயன்படுத்தப்பட்ட கார்களின் மெகா விற்பனை திருவிழா இன்று ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.
ஸ்ரீ சாமி கார்ஸ் தலைவர் சந்தோஷ் குமார்,தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாறிச்செல்வன், சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சு அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நகழ்ச்சியில்,, ஸ்ரீ லட்சுமி நாராயணன் மஹால் உரிமையாளர் லலிதா, சி.சி.டி.ஏ செயலாளர் கண்ணன், கௌரவ தலைவர் சேகர், ஸ்ரீ சாமி கார்ஸ் மேலாளர் சோமசுந்தரம் மற்றும் ஸ்ரீ சாமி கார்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.நான்கு நாட்கள். நடைபெற உள்ள இது குறித்து, ஸ்ரீ சாமி கார்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.சந்தோஷ்குமார் கூறுகையில்…
,வாடிக்கையாளர்களுக்கு தற்போது உள்ள சூழ்நிலையில், கார்களின் மீது ஏற்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த யூஸ்டு கார் மேளா நடத்துவதாகவும்,. இந்த மேளாவில் உயர் தர சொகுசு கார்கள் முதல் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையிலான கார்கள் என 600 க்கும் மேற்பட்ட கார்களை பொது மக்கள் நேரில் பார்த்து வாங்கி செல்லலாம். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற,இந்த மெகா விற்பனை திருவிழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து அனைத்து வகையான பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து இருப்பதாக தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை ஒருமணி நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு விற்பனை கவுண்டர்களும், பேங்க் லோன் வசதியும் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மிக குறைந்த முன்பணத்தில், மிக குறைந்த வட்டியில் 90% வரை உடனடி கடன் வசதி பெற்று குறிபிட்ட வாகனங்களை எடுத்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..