கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் புதிய தார்சாலைக்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராம வகுத்து மலை பகுதியில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க 66 ஏக்கர் பரப்பளவில் ஏற்கனவே ரூ.44 கோடி மதிப்பில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மைதானத்திற்கு வருவதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 3.3 கி.மீ. தூரம் ரூ.21கோடியே 70 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை , பாலங்கள் கட்டுவதற்காக பூமி பூஜைகள் நேற்று நடந்தது. இந்த பணிகள் இடைகரை பாலம் முதல் ஜல்லிக்கட்டு மைதானம் வரை நடைபெறும்.
வரும் டிசம்பர் மாதம் கடைசியில் சாலை பணிகள் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பூமி பூஜையை சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்,எல்,ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராதாமுத்துகுமாரி, இளநிலை பொறியாளர் வெங்கேஷ் பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சுஅழகு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், ராதாகிருஷ்ணன், பேருராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், துணைத் தலைவர் சுவாமிநாதன், திமுக நகர செயலாளர்கள் மனோகரவேல்பாண்டியன், ரகுபதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், பாக்கியலட்சுமி மகேந்திரன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, தனிச்சியம் மருது, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஷ், மாவட்ட பொறியாளர் அணி ராகுல், மற்றும் சாலை ஆய்வாளர்கள் பாஸ்கரன், மூக்கன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், வருவாய், நெடுஞ்சாலை, துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்