விக்கிரமங்கலம் அருகே ரிட்டையர்டு எஸ் ஐ. க்கு சொந்தமான. தென்னை தோப்புக்கு தீ வைப்பு. 4.5.லெட்சம் மரங்கள் கருகி நாசம் 4.பேருக்கு போலீசார் வலைவீச்சு.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த முதலைக்குளம் ஒத்தவீடு சேர்ந்தவர் துரைசிங்கம். 71. இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்..இவருக்கு இதே ஊரை சேர்ந்த உறவினரான ராசு மகன் மணிகண்டன் என்பவருக்கு சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூலை. 30.ந்தேதி துரைசிங்கத்திற்கு சொந்தமான தென்னை தோப்பிற்கு மர்ம நபர் . தீ வைத்ததால் மளமள தீ பிடித்து எரிந்ததில் மின் மோட்டர் உள்ளிட்ட 50.க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீ யில் எரிந்து கருகி சேதமானது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் துரைசிங்கம் கொடுத்த புகாரையெடுத்து உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்து முதலைகுளம் ஒத்தவீடை சேர்ந்த மணிகண்டன் கருத்தராஜா இளையராஜா.பிலிப்முருகன்.ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். தீயினால் .4.5.லெட்சம் மதிப்பிலான தென்னை மரங்கள் மின் மோட்டர்கள் எரிந்து கருகி சேதமாகி உள்ளது என போலீசார் தெரிலித்தனர்.