ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார்.

கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட செம்மங்குடி ஊராட்சி பகுதியில் .12 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டப்பட்டுவருவதையும், .23 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுவருவதையும், 7 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலறை கட்டடம் கட்டப்பட்டுவருவதையும், எண்கண் ஊராட்சியில் 11 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் தாமரைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணி, படித்துறை, குளியலறை கட்டடங்கள் கட்டப்பட்டுவருவதையும், மேலவீதியில் 11 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டுவருவதையும், 4 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்களுக்கான கழிவறையும், 5 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் பெண்களுக்கான கழிவறை கட்டப்பட்டுவருவதையும், ஊர்குடி ஊராட்சியில்.9 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் மரத்தெருவிலுள்ள செம்மன்குளத்தில் தூர்வாரும் பணி, படித்துறை கட்டப்பட்டுவருவதையும், விஸ்வநாதபுரம் ஊராட்சியில்.4 லட்சம் மதிப்பீட்டில் மேலகரை பகுதியில் மயான கொட்டகை கட்டப்பட்டு வருவதையும், 11 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் பத்தூர் மேல்கரை பகுதியில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், திருகலாம்பூர் ஊராட்சியில் .8 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்களுக்கான கழிவறை கட்டப்பட்டுவருவதையும், .6 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் வண்ணன்குளம் தூர்வாரும் பணி, படித்துறை கட்டப்பட்டுவருவதையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி சுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர்; மோகன்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *