திருவள்ளூர்
அத்திப்பேடு ஊராட்சி மக்களுக்கு சுடுகாடு பாதை கோவில் செல்லும் வழி கேட்டு ஊராட்சி மன்ற தலை வர் ரமேஷ் கோரிக்கை மனு அளித் தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது. அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியை ஒட்டி சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ் சாலைப் பணி நடைபெறுவதால் அத்திப்பேடு ஊராட்சி மக்கள் உபயோகித்து வரும் சுடுகாடு பாதை மற்றும் அதே பகுதியில் உள்ள பொன்னிய ம்மன் கோயில் செல்லும் சாலை பாதிக்கப்பட்டு அத்திப்பேடு ஊராட்சி மக்கள் பெறும் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாலை வசதிக்காக அத்திப்பேடு ஊராட்சி கிராம சபை கூப்டம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கோரிக்கைமனுயளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இச்சாலை தொடர்பாக பணிகள் வேகமாக நடைப்பெற்று வரும் நிலையில் அத்திப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் அத்திப்பேடு ஆர். ரமேஷ் பொன்னேரியில் உள்ள நில எடுப்பு தனி வட்டாட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது அத்திப்பீடு ஊராட்சி மக்கள் பல ஆண்டு காலமாக சுடுகாடு பாதை மற்றும் பொன்னியம்மன் கோயில் செல்லும் சாலையை அனுபவித்து வந்த நிலையில் தற்போது சாலை விரிவாக்கத்தின் படி மேற்கண்ட சாலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே மாற்று வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு அத்திப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்
மேலும் இது தொடர்பாக கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பி னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வழங்கப்பட்டுள் ளது மனுவைப் பெற்ற அதிகாரி மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்