தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடி -18 ஆடிபெருக்கு திருநாளில் கைலாசநாதர் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது

சித்தர்களும், ரிஷிகளும் சூட்சமமாக கைலாசநாதரை தரிசனம் செய்கிறர்கள் என்று பல ஆண்டுகளாக பெரியோர்கள் சொல்லிவருகிறார்கள் அமைதியான புனிதமான இடம் என்பதால் தியானம் செய்வதற்கும் மன அமைதிக்கும்சிறந்த இடமாக இருக்கிறது
இங்கு வந்து தரிசனம் செய்கின்ற பக்தர்களின்என்னிய எண்ணங்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள் அதனால் பல மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் காலையில் இருந்தே தரிசனம் செய்தனர்
கட்டளைதாரர்கள் சார்பாக பிரசாதம் காலையில் இருந்து வழங்கிவந்தார்கள் ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்