கோவை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கோவை குமணனை நியமித்ததை தொடர்ந்து அம்பேத்கர் சிலை மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி பணியை தொடங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட புதிய செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் அறிவித்திருந்தார்.அதில் கோவையில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என 5 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கோவை குமணன் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோவை குமணன் தலைமையில் போத்தனூர் ரயில்நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை, காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தன்னுடைய கட்சி பணியை தொடங்கினார்.
இநநிகழ்ச்சியில் மண்டல செயலாளர் வை.குடியரசு,மண்டல துணை செயலாளர் துரை.இளங்கோவன்,மாநில நிர்வாகி,ந.ச.இளவரசன், சீலாராஜன்,
வடக்கு மாவட்ட செயலாளர் இராசு.தொல்குடிமைந்தன்,கிழக்கு மாவட்ட செயலாளர் தம்பி ஸ்டீபன் சுந்தர், முன்னாள் மாவட்ட செயலாளர் நிலா மணிமாறன்,கோட்டை சேது,கோவை இராசா,கோவை சம்பத்,கோவை தமிழன்,சிங்கைகண்ணன்,மருத்துவர் மாணிக்கம்,விடுதலை அன்பன் இராஜகுமாரி,சத்யா சித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கட்சியின் கொள்கை கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து பேசிய கோவை மாநகர் மாவட்ட செயலாளர் குமணன், என்னுடைய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை விரைவில் அமைத்து கட்சி பணியை வேகப்படுத்துவேன்.தேர்பணிக்கு தயாராவேம்,எதிர்வரும் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தலைவர் தொல் திருமாவளவன் ஆணைக்கிணங்க பாடுபடுவோம்.மேலும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய எழுச்சி தமிழர் தலைவர் திருமா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.