திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய
திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டத்தில் மழைக் காலத்தில் 100 நாட்கள்பணிகள் தடையின்றிநடைபெற 5பணிகளுக்கு
நிர்வாக அனுமதி பெறவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பிரகாஷ் பேசினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி
ஒன்றியத்தில் ஆதிச்சமங்கலம், அரித்துவார மங்கலம், வீரமங்கலம்,மாணிக்க மங்கலம், திருவோணமங்கலம் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பழைய வாய்க்கால்கள் தூர்வா ரும் பணி, மரக்கன்றுகள்
நடுதல் உள்ளிட்ட பல் வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 3ஆயிர
த்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளில் சுமார் 70சதவீதம்பெண்களும் சுமார் 30சத
வீதம் ஆண்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை
யில் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய ட்டஒருங்கிணைப்பாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் ஆய்வு
கூட்டம் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சிஅலுவலர் (கி.ஊ) பிரகாஷ் தலைமை வகித்து பேசுகையில்,100 நாட்கள் பணியாளர்களுக்கு தடை இன்றிஊதியம் கிடைத்திடும்வகையில் ஒவ்வொருவாரமும் பணி என் எம் ஆர் புதன்கிழமை அலுவலகத்தில் சமர்ப்பித்து விட வேண்டும். 100 நாள்பணியாளர்களுக்கு ஊதியம் விடுதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை களையும் பொருட்டு பணியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைஅலுவலகத்தில் நேரில் வந்து குறைகளை சரி
செய்து கொள்ளலாம்.பருவமழைக் காலங்க ளில் பணிகள் தடை யின்றி நடைபெறும் வகையில் மாற்றுப் பணி
யாக மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணி
களுக்கு ஒவ்வொருஊராட்சிகளும் தலா குறைந்த பட்சம் 5பணி
களுக்கு நிர்வாக அனுமதி முன்னதாகவே பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். ஆய்வுக் கூட்டத்
தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாணி, கணினி உதவியாளர் கார்த்திக் மற்றும் 100நாள் வேலை திட்ட ஒருங்
கிணைப்பார்கள், பணித்தள பொறுப்பாளர்கள்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.