தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
விநாயகபுரம் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் இரண்டாம் கட்ட பணி இன்று நடைபெற்றது. இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு, மாவட்ட கூட்டுறவு துறை இணை இயக்குநர் முருகேசன், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்..