தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜன் தலைமையில் நாமக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
தமிழ்நாடு அரசு நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதற்கான நில ஆர்ஜிதம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை கண்டித்து பலமுறை பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
மாநில பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய முன்னேற்ற கழகம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட ஆண் பெண் விவசாயிகள் இதில் திரளாக கலந்து கொண்டு சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினார்கள்