புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராகாவும் பருத்தி, பயிறு வகைகள், காய்கறி பயிர்கள் மாற்று பயிராகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடி, விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாகவும் கிராமபுற மக்களுக்கு வறுமை மற்றும் வேலையின்மை குறைவுக்கு உதவுகிறது.
அதிக மகசூல் மற்றும் குறுகிய கால சாகுபடியாக உள்ள காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு லாபகரமான பயிராக மட்டுமின்றி மக்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகுக்கிறது.
காரைக்கால் மாவட்டத்தில் காய்கறி சாகுபடி செய்த வயல்களை வேளாண் கூடுதல் இயக்குனர் திரு.R.கணேசன் அவர்கள் தலைமையில் வேளாண் அலுவர்கள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். திருபட்டினம் உழவர் உதவியத்திற்குட்பட்ட வாஞ்சூர் வருவாய் கிராமத்தில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நாட்டு காய்கறிகள் வயல்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் இப்பயிர்களுக்கு மத்திய மாநில அரசின் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கபட உள்ளது.
எனவே மற்ற விவசாயிகளும் லாபம் தரக்கூடிய காய்கறி பயிர்களை சாகுபடி செய்யுமாறு அறிவுறித்தினார்கள். இக்கள ஆய்வில் வேளாண் அலுவலர் (தோட்டக்கலை) .R.சரவணன் மற்றும் திருபட்டினம் உழவர் உதவியக வேளாண் அலுவலர் M.இந்துமதி மற்றும் கிராம விரிவாக்க பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.