பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா. பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
பரமத்திவேலூர், ஆக 6:பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவர்கள் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் சந்திக்கொண்டு தங்களது கடந்தகால நினைவுகளை பகிந்து கொண்டனர்.
பரமத்தி வேலூரில் பழமையான அரசு நிதிஉதவி பெறும் கந்தசாமி கண்டர் கல்லூரி அமைந்துள்ளது. இக் கல்லூரியில் 1970 முதல் 1973-ஆம் ஆண்டு வரை இளங்கலை வணிகவியியல் பாடப்பிரிவில் பயன்ற முன்னார் மாணவர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
50 ஆண்டை முன்னிட்டு விதை விழுந்த மண்ணில் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கடந்த கால நினைவுகளையும்,குடும்பம்,தொழில் உள்ளிட்டவைகளையும் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக ஒருவரை ஒருவர் கட்டி தழுவி நலம் விசாரித்துக்கொண்டனர்.
கூட்டத்தில் கந்தசாமி கண்டர் அறநிறுவனங்களின் தலைவர் மருத்துவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பேசினார்.
விழாவில் பொழுதுபோக்கிற்காக மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள்ஏகாம்பரம்,சந்திரசேகர்,சேதுபதி,வீரமணி,கோவிந்தசாமி,கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.