நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 33 வது ஆண்டு விழா, மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆண்டறிக்கை, வரவு செலவு குறித்த விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்
இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் சேகர் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் சி. தன்ராஜ் செயலாளர் ராஜ் என்கிற ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்
முன்னதாக லாரி உரிமையாளர் நலனை காக்க ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காலாவதியான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன இதனை அடுத்து ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது
பின்னர் பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் குடும்ப மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்