கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இந்து முன்னணியின் சார்பாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆனைமலையில் உள்ள லட்சுமி மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட கோட்டச்செயலாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து முன்னணியின் மாநில செயலாளர் அண்ணாத்துரை சிறப்புரையாற்றினார்
அப்போது ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதிஆனைமலைப்பகுதியில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் உழவாரப்பணி செய்யவேண்டும் அதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சுமார் 68 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகளை மேற்க் கொள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் சூர்யா மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்