செய்யாறு செய்தியாளர்
MS.பழனிமலை
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் லயன் சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் லயன் சங்க உறுப்பினர் செ. முரளி,செ. கவின் ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருக்குறள் ஆர்வலர் இரா. கலைமணி பங்கேற்று மாணவர்களிடையே திருக்குறள் பெருமைகளை எடுத்துக் கூறினார்.
உலகிலேயே பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக உலகப் பொதுமறை திருக்குறள் இருக்கிறது என்று கூறினார். மாணவர்களின் அதிக திருக்குறள் கூறிய மாணவி சங்கமித்ரா 1100 திருக்குறள் கூறி முதல் பரிசு பெற்றார்.
திருக்குறள் கூறிய அனைத்து மாணவ மாணவிகளுக்கு புத்தகப் பரிசு வழங்கப்பட்டன. ஆசிரியர் கோ. ஜெகநாதன் நடுவராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்வில் தி. வடிவேல் அவர்கள் திருவள்ளுவர் படத்தை நூலகத்திற்கு வழங்கினார்.
நிகழ்வில் 123 வது புரவலராக இரா. கலைமணி, 124 புரவலராக லயன் செ. முரளி ஆகியோர் தலா ரூபாய் 1000 செலுத்தி புரவலர்களாக இணைந்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்புற நூலகர் ஜா.தமீம் செய்திருந்தார்.