எஸ். செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் சீர்காழி கிழக்கு ஒன்றியம் சார்பில் திருவெண்காட்டில் நடைபெற்ற கலைஞரின் மௌன அஞ்சலி மற்றும் அமைதி பேரணியில் கலந்து கொண்டு கலைஞரின் திருவரப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இதில் ஒன்றிய பெருந்தலைவர் கமல்ஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார்,ஜெயபிரகாஷ்,நகர செயலாளர் சுப்புராயன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்