ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் விவசாயிகளின் நிலத்தை என்எல்சி இடம் இருந்து மீட்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தேமுதிக 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 அனைத்து மகள்களுக்கு வழங்க வேண்டும் விவசாயிகளின் நிலத்தை என்எல்சி இடம் இருந்து மீட்க வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் காவிரி டெல்டாவில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதி அறிவித்தபடி அனைத்து மகளிருக்கும் கலைஞரின் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்க வேண்டும், நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்திற்காக விவசாயிகளின் நிலத்தை என்எல்சி இடம் இருந்து மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன் நகரக் கழகச் செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்