நூலகம் மற்றும் அங்கன்வாடி கட்டுவதற்கான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகை.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகையிட்டனர். திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி கிராம சர்வே எண் 122/6.A ஆதி திராவிடர் நத்தம் அம்பேத்கார் நகரில் சுமார் 10 ஆண்டுகளாக 200 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆதி திராவிடர் நத்தத்தில் காலியாக இருக்கும் இடத்தில் நூலகம் மற்றும் அங்கன்வாடி கட்டுவதற்காக தயாராக இருந்தது.

இடையில் குடியேறிய விடுதலை கட்சியை சேர்ந்த காளிமுத்து என்பவர் மேற்படி காலி நத்தத்தை மோசடியாக அபகரிக்க திட்டமிட்டு யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் மேற்படி ஆதி திராவிடர் நத்தத்தில் சிறிய சூலாயுதத்தை ஊன்றி சிறிய கோயிலாக மாற்றி விட்டார்.

இதை அறிந்த திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரும், திருப்பரங்குன்றம் வருவாய் வட்டாட்சியரும் அரசியல் கட்சி பிரமுகர் காளிமுத்துவிடம் நீங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை நீங்களே அகற்றி கொள்ளவேண்டும். தவறினால் நாங்கள் மேற்படி ஆக்கிரமிப்பை அகற்றுவோம் என்று கூறி, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்குரிய நோட்டீஸையும் மேற்படி காளிமுத்துவிற்கு வழங்கியுள்ளார்.

நோட்டீஸை பெற்றுக்கொண்ட காளிமுத்து நான் பிரபல கட்சியில் பெரிய பதவியில் இருக்கிறேன். நான் யார் என்று தெரியாமல் ஆக்கிரமிப்பை அகற்ற கூறுகிறீர்கள் என்று அதிகாரிகளையே மிரட்டுகிறார். பெண்களை வைத்து செய்தாலும் எனக்கு அதிகாரிகள் பலம் தமிழக அரசு திட்டமிட்டபடி காளிமுத்து செய்த ஆக்கிரமிப்பினை அகற்றிட வேண்டும். அதிகாரிகளுக்கும் தலித் மக்களாகிய எங்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

தவறினால் பெருங்குடியில் இருக்கும் அனைத்து கட்சியை சேர்ந்த தலித்துகளும் ஒன்று சேர்ந்து மேற்படி நபரிடம் இருந்து எங்களது உயிருக்கும் எங்களது உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *