எஸ். செல்வகுமார்
செய்தியாளர்
சீர்காழி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்.வடிகால் வாய்க்கால்கள் சரிவர துருவாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளான புங்கனூர், கற்கோயில், எடக்குடி வடபாதி,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்த பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்ய சில நாட்களே இருந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதிகள் சரிவர சுத்தம் செய்யாதே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
திருநகரி வாய்க்கால் பாசனத்தில் இருந்து பிரியும் ஆண்டி வாய்க்கால் தோட்டமாணியம் வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர தூர்வாரப்படாத நிலையில் இருப்பதால் மழை நீர் வடிய முடியாத நிலையில் உள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருந்தால் நெற்பயிர்கள் முலைக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே பொதுப்பணிதுறை அதிகாரிகள் கேற்கண்ட வாய்க்கால்களை தூர்வாரி தர கோரிக்கை விடுத்தனர்.மேலூம் குருவை விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.