பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே, சக்கராபள்ளி ஹஜ்ரத் சையத் முஹம்மது தர்வேஷ் வலியுல்லாஹ் ஹந்தூரி எனும் சந்தனக்கூடு உரூஸ் பாத்திஹா..
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள அய்யம்பேட்டை சக்கரப்பள்ளி கிராமத்தில் ஹஜ்ரத் சையத் முஹம்மது தரவேஷ் வலியுல்லா சந்தனக்கூடு உரூஸ் பாத்திஹா நிகழ்ச்சி நடைபெற்றது.
சந்தனக்கூடு உரூஸீடன் துவங்கிய நிகழ்ச்சியில், வலியுல்லாவிற்கு மௌலூது சரிப் ஓதி, பக்கீர்மார்களின் தப்ஸ்கள் இசை முழங்க, கொடியேற்றத்துடன் ரவ்லா சரீபீல் சந்தனம் பூசி, பொதுமக்களுக்கு தப்ரூக் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
சந்தனக்கூடு உரூஸ் நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை சக்கராப்பள்ளி ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.