எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

நூற்றாண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் ஆலய திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைத் துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

பழமையான இக்கோயில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்தாண்டு விழாவானது கடந்த ஆகஸ்ட் 2- ம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரிய மாலா கருப்பாயி உடனாகிய காத்தவராயன் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு உற்சவ தெய்வங்களான காத்தவராயன் ஆரிய மாலா கருப்பாயி அம்பாளுடன் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து காத்தவராயன் அம்பாளுக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல், சிறப்பும் பூரணாகுதி திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் இன்று இரவு நடைபெற உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *