செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் 175 பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 400-க்கும் இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றியும் அரசுக்கு இணையான ஊதியம் வழங்க அரசு மறுத்து வருகிறது.
இதனால் அரசு உயர்வுக்கு இணையான ஊதியம் பெறாமல் மெலிவடைந்த நிலையில் சர்க்கரை தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் குறைகளை போக்கும் விதமாக அரசு உரிய பேச்சு வார்த்தை நடத்தி அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவும் அதே போல நீண்ட காலமாக பணியாற்றி வரும் பருவகால தொழிலாளர்களை நிரந்தர படுத்தவும் கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு செய்தியாளர்
MS.பழனிமலை