மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும்
இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமையான கிராம தேவதையை குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமையையொட்டிஅம்மனை அழைத்து வருவது நிகழ்ச்சியும் கோயிலின் எதிரே உள்ள குளக்கரையில் பெண்கள்ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதன் பின்னர் கோயிலின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக விரதமிருந்து தீமிதித்தனர்.
அதன் பின்னர்,மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
ஸ்ரீ எல்லையம்மன் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் வளம் வந்து பக்தர்களுக்குஅருள் பாலித்தார்.
பின்பு விழாவில் கலந்து கொண்டபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி மேகநாதன் செய்திருந்தார்.