பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத்
உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி பாபநாசம் பழைய பஸ் நிலையத்தில் பேருந்து பயணிகள்,ஆட்டோ மற்றும் வேன் தொழிலாளர்களுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி தலைமையில்
கபிஸ்தலம் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள் குமார்,கோவிந்தராஜ் மற்றும் போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்கள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.