ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறையின் சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உடனிருந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழகத்திற்கு அடிமையாக கூடாது. குடும்பத்தினர், நண்பர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும்.

அதேபோன்று, போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிபடுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.

முன்னதாக, போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டதனை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
பேரணியில் 5 கல்லூரிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது.
நிகழ்வில், துணை ஆட்சியர் (கலால்) அழகர்சாமி, வட்டாட்சியர் நக்கீரன், திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, நன்னிலம், குடவாசல் அரசு கலை கல்லூரிகள் மற்றும் ராபியம்மாள் கலை கல்லூரி , நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *