மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

“போதை ஒழிப்பு விழிப்புணர்வு”

மன்னார்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 10 கி.மீ மரத்தான் ஓட்டம் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சே நோ டு ட்ரக்ஸ் திருவாரூர் என்கிற எழுத்து வடிவில் நின்று உறுதி மொழி எடுத்து கொண்டனர் .

உலகம் முழுவதும் மனித குல சமூகத்தை சீரழிப்பதில் முதலிடத்தில் உள்ள போதை பொருட்களின் பயன் பாட்டால் உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள், பொது அமைதிக்கு பங்க விளைவிக்கும் வகையில் அதிகரிக்கும் குற்ற செயல்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல்

வன்கொடுமைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்கேடுகள் குறித்து அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் மன்னார்குடி உட்கோட்ட காவல் துறை சார்பில் 10 கிமீ தூரத்திற்கான போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம், 5கிமீ மீட்டர் தூரத்திற்கான நடை போட்டி மற்றும் மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை நடந்தது.

முன்னதாக, மன்னார்குடி அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் துவங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை தேசிய அளவில் சாதனை படைத்த மூத்த தடகள வீரர் ஓய்வு பெற்ற எஸ்ஐ நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

10 கிமீ தூரத்திற்கான மினி மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் நீடாமங்கலம் சதீஷ்குமார் முதலிடத்தையும், மன்னார்குடி பிரபாகரன் இரண்டாம் இடத்தையும், நீடாமங்கலம் ராஜ்குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் சவளக்காரன் மார்க்க தர்ஷினி முதல் இடத்தையும், மன்னார்குடி தர்ஷினி இரண்டாம் இடத்தையும், சவளக்காரன் சபிக்க்ஷா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து நடந்த மினி மாரத்தான் மற்றும் நடைபோட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர் .. பின்னர் அரசு கல்லூரி , தனியார் கல்லூரி பள்ளி மாணவ , மாணவிகள் என 2000-த்திற்கும் மேற்பட்டோர் சே நோ டு ட்ரக்ஸ் திருவாரூர் என்கிற எழுத்து வடிவில் நின்று போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *