வலங்கைமான் அருகில் உள்ள மாடகுடியிலிருந்து
செம்மங்குடி வரை நெடு ஞ்சாலையை அகலப்படு த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்.


கும்பகோணம்-நீடாமங்கலம் நெடுஞ்சாலையில்
மாடகுடியிலிருந்து செம் மங்குடி வரை சாலையை
அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலி
யுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலம் வரை உள்ள சுமார் 25 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை கடந்த ஓராண்டாக பல கோடி ரூபாய் செலவில்
அகலப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் முடிகொண்டான் ஆறு, திருமலை ராஜன் ஆறு ஆகியவற்றில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு
வருகிறது. இருப்பினும்தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாமாடகுடியிலிருந்து திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாசெம்மங்குடி வரை உள்ள
5கிலோ மீட்டர் சாலை அகலப்படுத்தபடாமலும்,
புதுப்பிக்கப்படாமலும் உள்ளது.

சாலையில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்களும்உள்ளது. மாடகுடியிலி ருந்து செம்மங்குடி வரைகிழக்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க
இருப்பதாகவும், இதனால் இதற்கு இடைப்பட்ட பகுதி புதுப்பிக்கப்பட வில்லை என கூறப்ப டுகிறது.

இருப்பினும் இது வரை புறவழிச் சாலை பணிகள் துவங்கப்படாத நிலையில், அப்டியே இனிமேல் துவங்கினாலும் இரண்டுஆற்று பாலங்கள் மற்றும்பாசன வாய்க்கால் பாலங்கள் கட்டப்படக் கூடிய நிலையில் அந்தபுறவழிச்சாலை பணிகள்முடிய குறைந்தபட்சம் 3அல்லது 5ஆண்டுகள் கூட ஆகலாம் என்ற நிலையில் அதுவரைஇந்தபழையசாலையை மாடகுடியிலிருந்து செம்மங்குடி வரை உள்ள
5கிலோ மீட்டர் நெடுஞ் சாலை ஆக்கிரமிப்பு களை அகற்றி புதுப்பி த்து தர வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்
தியுள்ளனர்.

இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட
நெடுஞ்சாலை துறை யின் அதிகாரிகள் நடவடி
க்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்
பார்ப்போடு இருக்கி றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *