தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருப்பத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..