தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நூற்றாண்டு கடந்த விக்டோரியா நினைவு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கான செயல்பாட்டினை விளக்கிப் பேசினார்.
நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் ஞானசேகரன்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பன்னீர்செல்வம்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி,உதவி தலைவர் ராஜாராம்,நகர்மன்ற உறுப்பினர்கள் சுதா நாகலிங்கம்,சந்தான லட்சுமி சுந்தரபாண்டியன்,முகமதுஅலி,ராணி நாராயணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.