செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுடன் அமைச்சர் மெய்ய நாதன் கலந்துரையாடல் ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக மீனவர் மாநாடு குறித்து ஆலோசனை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் மண்டபத்தில் மாவட்ட மீனவ கிராம பிரதிநிதிகளுடன் அமைச்சர் மெய்ய நாதன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக மீனவர் மாநாடு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராம பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்
அப்பொழுது மீனவ கிராமங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார் மேலும் அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசிளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்
ராமநாதபுரத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு மீனவ கிராமத்தில் இருந்து மீனவ பிரதிநிதிகள் கலந்து கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர் இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மீனவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்