எஸ். செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் மத்திய அரிமா சங்கம் சார்பாக இதய நோய்க்கான இலவச மருத்துவ முகாம் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் மத்திய அரிமாசங்கம் விக்டோரியா அரிமா சங்கம் இணைந்து நடத்தும் இதய நோய்க்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
இம்முகாமினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மருத்துவ முகாமில் வைத்தீஸ்வரன் கோவில், புங்கனூர் சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு இருதய நோய் குறித்து இலவச பரிசோதனைகள் நடைபெற்றது
குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொலஸ்ட்ரால், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட இருதய நோய் சம்பந்தமான சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மத்திய அரிமா சங்க தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சபரி மற்றும் விக்டோரியா அரிமா சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் நடராஜன், பொருளாளர் குமார, மண்டல தலைவர் செந்தில் வைரவன், வட்ட தலைவர்கள் சுரேந்தர் குமார் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இம்முகம்மிர்க்கானா ஏற்பாடுகளை செய்திருந்தனர் சுற்றுவட்டார பகுதிகளை ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் இலவச சிகிச்சை மேற்கொண்டனர்