ஆர்கண்ணன் செய்தியாளர் மணப்பாறை.
மணப்பாறையில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 600 பள்ளி மாணவ மாணவியர்கள் “SAY NO TO DRUGS” என்ற வடிவில் நின்று போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், ஆய்வாளர்கள் கோபி, பாலகிருத்திகா, கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

அதேபோல், வையம்பட்டி காவல்துறை மற்றும் ஊராட்சிமன்ற நிர்வாகம் சார்பில் தலைவர் சூர்யா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் தனலெட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கோட்டாட்சியர் உறுதிமொழி வாசிக்க சூர்யா நினைவு அறக்கட்டளை பாராமெடிக்கல் மற்றும் கேட்டரிங் கல்லூரி மாணவ மாணவியர்கள், இருபால் ஆசிரியர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.